×

ஊத்துக்கோட்டை, பெரியபாளையத்தில் புதிதாக 7 சிக்னல் கம்பங்கள் அமைப்பு: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பிலும், பெரியபாளையத்திலும் செயல்படாத பழைய சிக்னல் கம்பங்களை அகற்றி விட்டு புதிதாக 7 சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதைச் சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் வியாபாரிகள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் ஊத்துக்கோட்டைக்கு வந்து, பின்னர் இங்கிருந்து பெரியபாளையம், ஆவடி, திருவள்ளூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளுக்கு சென்றுவருவார்கள். மேலும், ஆந்திர மாநிலம் திருப்பதி, புத்தூர், ரேணிகுண்டா ஆகிய பகுதிகளில் இருந்து ஒரு நாளைக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பஸ் மற்றும் கனரக வாகனங்கள் சென்னை செல்லும்.

இதனால் ஊத்துக்கோட்டை நான்குமுனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஊத்துக்கோட்டை காவல் துறை சார்பில் திருவள்ளூர் சாலை, நாகலாபுரம் சாலை, சத்தியவேடு சாலை, சென்னை சாலை ஆகிய 4 சாலைகளில் சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் பழுதாகி செயல்படாமல் கிடந்த இந்த 4 சிக்னல் கம்பங்களையும் போக்குவரத்து போலீசார் கிரேன் மூலம் அகற்றினர். பின்னர் டிஎஸ்பி கணேஷ் குமார் தலைமையில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன்நாதன், ஏட்டு திருக்குமரன் ஆகியோர் எல்இடி பல்புகள் பொறுத்திய புதிய சிக்னல் கம்பங்களை கிரேன் மூலம் அமைத்தனர். இதேபோல் பெரியபாளையத்தில் 3 சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டது.

The post ஊத்துக்கோட்டை, பெரியபாளையத்தில் புதிதாக 7 சிக்னல் கம்பங்கள் அமைப்பு: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Oothukottai, Periyapalayam ,Oothukottai ,-node ,Periyapalayam ,
× RELATED கடை ஊழியர் மீது சரமாரி தாக்குதல்: வாலிபர் கைது